திண்டிவணத்தில் உலக மண் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
உலக மண் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்;
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம், தரம்சந்த் ஜெயின் பள்ளி, பாபுராயன்பேட்டை எஸ்.ஆர்.எம்., வேளாண்மை அறிவியல் கல்லுாரி சார்பில் வண்டிமேடு வ.உ.சி.திடலில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு, திண்டிவனம் டவுன் சிறப்பு உதவி ஆய்வாளர் சோலை தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.கல்லுாரி முதல்வர் ஜவஹர்லால், தரம்சந்த் பள்ளி அறக்கட்டளை நிர்வாகி அனுராக், பள்ளி முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தனர்.ஊர்வலத்தில், குழு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், கல்லுாரி உதவி பேராசிரியர்கள், கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில், மண்ணின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.