விக்கிரவாண்டியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

விக்கிரவாண்டி பொது மருத்துவ முகாம்;

Update: 2024-12-17 03:15 GMT
விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது குறித்தும், இதனால், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ரமணி மற்றும் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.மேலும் மருத்துவமனை ஊழியர்கள் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Similar News