திருக்கோவிலுார் அடுத்த அத்தண்டமருதுார் அடுத்த பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரமேஷ், 38; இவர், நேற்று முன்தினம் அணைக்கட்டு அருகே பெண்ணையாற்றில் மீன்பிடிக்க இறங்கினார். அப்பொழுது சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று சி.மெய்யூர் அருகே ரமேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. திருவெண்ணைநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.