திருக்கோவிலுார் பண்பாட்டு கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்திற்கு, செயல் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.புதிய தலைவராக முருகன், பொதுச் செயலாளராக அப்பர் சுந்தரம், பொருளாளராக நடராசன், துணை தலைவர்களாக சுப்ரமணியன், மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக பழனிவேல், கோவிந்தன், திருவாணன், சத்தியமூர்த்தி, ஜெயக்குமார், நாராயணன் கல்யாணகுமார், ரவிச்சந்திரன், ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.