மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய நிதி ஒதுக்க கவுன்சிலர்கள் ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய ஊராட்சி வீதம் நிதி ஒதுக்கீடு செய்ய கவுன்சிலர்கள் சாதாரண குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.;
அரியலூர், டிச..17 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய யக் குழு சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ரவி (எ) ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் மன்ற பொருட்களை உதவியாளர் மாலதி வாசித்தார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன் வரவேற்று பேசினார் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் நன்றி கூறினார்.