திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அமைப்பாளர் மாநில குழு உறுப்பினர் தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது, ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை முழுமையாக வழங்கி விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த விவசாய தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்திட வேண்டும் என்றும் தென்பண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிடவேண்டும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் போலி அட்டைகளை பயன்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் தடுத்திட வேண்டும் தொடர்ந்து பணி செய்யாத களப்பணியாளர்களை மீண்டும் பயன்படுத்தி ஊழலுக்கு துணை போகாதே என்றும் தமிழ்நாடு முழுவதும் வசிக்கின்ற குடிமனை இல்லாத அனைவருக்கும் குடி மனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் நந்தி மற்றும் சிபிஐ மாவட்டச் செயலாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்