புதுக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் -மாவட்ட செயலாளர் பங்கேற்பு*;

Update: 2024-12-17 09:15 GMT
திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் -மாவட்ட செயலாளர் பங்கேற்பு* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கோவிலூர் கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியர் இன மக்கள் சென்று வர போதுமான சாலை வசதி இல்லை, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள புறம்போக்கு இடங்களை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்டதை கண்டறிந்து தவறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தாலுக்கா குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயலாளர் சங்கரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தாலுக்கா செயலாளர் காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜோதி, காத்தவராயன், முன்னாள் தாலுக்கா செயலாளர் காசி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கேசவன், ரவி, வீரமணி, சிங்காரம், ஜெயராமன், வீரபத்திரன், கிளை செயலாளர் ஜெய்சித்ரா, லட்சுமி, ஜான் போஸ்கோ, இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். பேட்டி : சங்கரி, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

Similar News