ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தர கோரி மனைவி புகார்
ஜெயங்கொண்டம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.;
அரியலூர், டிச.18- ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த கொளஞ்சி யின் மகன் சக்திவேலுவுக்கும்(33). சரண்யாவுக்கும்(21) கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றநிலையில் சரண்யாவின் கணவர் சக்திவேல் கடந்த 6-ந் தேதி சென்ட்ரிங் வேலை செய்வதற்கு வெளியூர் செல்வதாக கூறிச் சென்றவர் இதுநாள் வரை திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் மனைவி சரண்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்