முத்தூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
முத்தூரில் லாட்டரி சீட்டு விற்றவரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்தனர்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகர பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக வெள்ளகோயில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் உதவி ஆய்வாளர் மணிமுத்து தலைமையில் காவல்துறையினர் நகர பகுதியில் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது முத்தூர் பஸ் நிலையத்தில் பெருமாள் புதூரைச் சேர்ந்த செந்தில்(56) என்பவர் விற்பனைக்காக வெளி மாநில லாட்டரி சீட்டு டோக்கன் வைத்துக் கொண்டு ரூ. 50 க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.