திருக்கோவிலுார் அடுத்த ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ் ணன் மகன் ஆகாஷ், 24; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. மினி சரக்கு வேன் ஓட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் தனது வேனில் திருக்கோவிலுார் சென்ற போது, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 15 வயது சிறுமியை பள்ளியில் விடுவதாக கூறி அழைத்துச் சென்று, அத்திப்பாக்கம் அருகே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கடந்த 15ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சிறுமியிடம் இருந்து பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ஆகாஷை கைது செய்தனர்.