பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு வைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் பேருந்து நிழற்குடைக்கு முன்பு வைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-12-18 08:38 GMT
அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே பயணிகள் அமரும் வகையில் நிழற்குடை ஒன்று உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து அவரவர் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்வது வழக்கம் இந்நிலையில் பேருந்து நிழற்குடைக்கு .முன்பு மறைத்து வைக்கப்பட்ட பதாகைகளால் பேருந்து வருவது தெரியாமல் பேருந்துகளை தவறவிடுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் காற்றோட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பயணிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே இனிவரும் காலங்களில் இது போன்று பேருந்து நிழற்குடைகளை மறைத்து பதாகைகள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிகின்றனர்.

Similar News