வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் மகேஸ்வரி, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட பல்வேறு படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் மற்றும் குழுத்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா நகராட்சி மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். வரும் ஜனவரி மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் திருத்தம் செய்து வெளியிட வேண்டிய சூழல் உள்ளதால், அது குறித்து நடைபெற்ற பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார் மகேஸ்வரி.