ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

Update: 2024-12-20 07:26 GMT
ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நடத்திய அதிரடி சோதனையில் கெட்டுப்போன மற்றும் விற்பனைக்கு தகுதியற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் விஜயகுமார் தலைமையில் ராமேஸ்வரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் மீன் மார்க்கெட்டில் சோதனை நடத்தினர் அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ஐந்து கிலோ கெட்டுப் போன விற்பனைக்கு தகுதியற்ற நிலையில் இருந்த 5 கிலோ மீன்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதனை குழிதோண்டி புதைத்து அழைத்தனர் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளை எச்சரித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.

Similar News