தமிழ் புலிகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு*

தமிழ் புலிகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு*

Update: 2024-12-20 08:41 GMT
விருதுநகரில் தமிழ் புலிகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நாடாளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன கோஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட நிலையில் சாலையில் இழுத்தப் படி ஓடி வந்தார். இதனை சற்றும் எதிர்பாராதபாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தீ வைத்து எரிக்கப்பட்ட உருவ பொம்மை மீது தண்ணீரை ஊற்றி அனைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Similar News