உத்திரமேரூரில் டெங்கு கொசு உற்பத்தி தடுக்கும் பணி தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2024-12-20 12:27 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கி உள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, உத்திரமேரூர் மருத்துவ வட்டாரத்தில் உள்ள உத்திரமேரூர், சாலவாக்கம், பெருநகர் ஆகிய பகுதிகளில், நேற்று டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து, சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, நல்ல தண்ணீரில் உருவாகும் 'ஏடிஸ்' கொசு உற்பத்தியை தடுக்க, வீடுகளின் பின்புறம் உள்ள உடைந்த மண்பாண்டங்கள், வாகனங்களின் டயர், பிளாஸ்டிக் பேரல் ஆகிய பொருட்களை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.மேலும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றில் குளோரினேசன் செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யுமாறு, ஊராட்சி நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறையினர் ஆலோசனை வழங்கினர்.

Similar News