ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு

செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்தூர் பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து செல்வநாயகபுரம் மற்றும் தூரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Update: 2024-12-20 12:35 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட செல்வநாயகபுரம் ஊராட்சியில் சுமார் 900 குடும்பங்களும், சுமார் 2500 மக்கள் தொகையுடன் வசித்து வருகிறோம் எனவும், அவ்வாறு இருக்கும் நிலையில் தேசிய ஊரக வேலை வாய்ப்புக்கள் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் நம்பி பிழைப்பு நடத்தி வருகிறார்கள் அவ்வாறு பேரூராட்சியோடு இணைத்தால் இந்த வேலையும் பாதிக்கப்படும் எனவே முதுகுளத்தூர் பேரூராட்சியோடு எங்களை இணைக்க வேண்டாம் என செல்வநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாலுச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்.

Similar News