ராமநாதபுரம் வாத சந்தை ஏலம் எடுப்பதில் இது பிரிவினருக்கு இடையே மோதல்
முதுகுளத்தூர் வாரச்சந்தை ஏலத்தில் இருதரப்பினரிடையே அடிதடி, பதற்றம்.போலீசார் குவிப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வாரச்சந்தை ஏலம் செயல்அலுவலர் தலைமையில், போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது. ஏலம் கேட்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே பெரும் அடிதடி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது . கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கலவரம் ஏற்பட்டதை அடுத்து சந்தக் கடை ஏலம் நிறுத்தி மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் முதுகுளத்தூரில் பதற்றமான சூழ்நிலை உறுவாகி உள்ளது. போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.