உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் மேற்கு மாவட்ட பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் அமைப்பு சார்பில் நடந்தது;

Update: 2024-12-20 15:19 GMT
அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்சாவைக் கண்டித்து கடலூர்‌, கொல்லுக்காரன் குட்டை சந்தை முன்பாக, ராஜூவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். வட்டாரத்தலைவர் சீத்தாராமன், மாநில காங்கிரஸ் பேச்சாளர் மோகன்தாஸ், கடலூர் (ம)மாவட்டத் தலைவர் குமரவேல், இளைஞர் காங்கிரஸ் கோபிநாத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பஞ்சாயத்து ராஜ் தேசிய செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார். நடராஜன், சர்க்கரை நடராஜன், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெருமாள் நன்றியுரை ஆற்றினார்.

Similar News