கடலூரில் தைத்திருநாளை முன்னிட்டு கோலப்போட்டி

கடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்;

Update: 2024-12-20 15:21 GMT
கடலூரில் தை திருநாளை முன்னிட்டு கோலப்போட்டி நடத்துவதென கடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்க மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு தலைவர் போஸ். இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் மூத்த வழக்கறிஞர் வரம் இராம. இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார். இக்கூட்டத்தில் செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் தண்டபாணி, செய்தி தொடர்பாளர் டாக்டர்.தி. இராஜமச்சேந்திர சோழன், துணைத் தலைவர் முகுந்தன், இணைச் செயலாளர் ஜெயக்குமார் ,வரம் பிரபு குமார் ,கார்மேக வண்ணன் ,அப்துல் ஜப்பார், ஆனந்தன், காலபைரவர் குமார், வழக்கறிஞர் திருவேங்கடம், திருவாதிரை, கனகராஜ், உலகநாதன் ,ராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வழக்கறிஞர் வரம். இராம. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தை திருநாளை முன்னிட்டு கோலப்போட்டி நடத்துவதெனவும் மாநகராட்சியை அழகுப்படுத்தும் விதமாக இரண்டாம் கட்டமாக திருக்குறள். எழுதுவது எனவும் ஜட்ஜ் பங்களா சாலையில் ஐமாஸ் விளக்கு போட நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Similar News