அமைச்சர் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனு

அமித்ஷாவை தரக்குறைவாக பேசியதாக புகார்;

Update: 2024-12-20 15:23 GMT
அமைச்சர் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மகனும் விளையாட்டு மேம்பாட்டு அணி கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளருமான சி.வெ.க.வெங்கடேசன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக பேசியும், அடிப்போம் என்று பேசியும் சர்ச்சையை ஏற்படுத்தியது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டிக்கும் வகையில் பாஜக நகர தலைவர் பாலமுருகன் காவல் நிலையத்தில் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார், செயற்கைக்குழு உறுப்பினர் எழிலரசன், ஓபிசி அணி துணை தலைவர் செல்வராஜ், தாமரை மணிகண்டன், வழக்கறிஞர் வெங்கடாச்சலம், வெங்கடேசன், பூவராகவன், ஜெயராமன், ஜெயிகனேஷ், செந்தில்குமார், கணேஷ், செல்வம், அருள், முருகன், பாலு, சரண், குணா, ராஜாராம், கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News