இயேசு கிறிஸ்து பிறப்பு செய்தியை தெரிவிக்கும் சிறப்பு பவனி
விருத்தாசலத்தில் ஆற்காடு லுத்திரன் திருச்சபை சார்பில் நடந்தது
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு கிறிஸ்மஸ் விழா உலகம் முழுவதும் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்புரமாக நடந்து வரும் நிலையில் இயேசு கிறிஸ்துவின் செய்தியை உலகிற்கு சொல்லும் வகையில் விருத்தாச்சலம் ஆற்காடு லுத்திரன் திருச்சபை சார்பில் சிறப்பு பவனி நடந்தது. இதில் ஞாயிறு பள்ளி குழந்தைகள், இறைமக்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பவனியாக சென்று போதகர் டியாப்ளஸ் வினோத்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் பலூன் வழங்கியும் இயேசு கிறிஸ்து பிறப்பு செய்தியை நகர மக்களுக்கு தெரிவித்தனர். இந்த பவனியானது விருத்தாசலம் ஆற்காடு லுத்திரன் திருச்சபையில் இருந்து புறப்பட்டு காட்டுக்கூடலூர் சாலை கடலூர் சாலை பாலக்கரை பங்களா வீதி வழியாக மீண்டும் திருச்சபையை சென்றடைந்தது.