விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அம்பேத்கர் படத்தை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
தமிழ் மாணவர் மன்றம் சார்பில் நடந்தது
அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய அமித்ஷாவை கண்டித்து விருத்தாசலத்தில் தமிழ் மாணவர் மன்றம் சார்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம். நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய அமித்ஷாவை கண்டித்து விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி தமிழ் மாணவர் மன்றம் அமைப்பின் சார்பில் கல்லூரி நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாளர் கதிரவன் தலைமை தாங்கினார். திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கையில் அம்பேத்கர் படத்தை ஏந்தி கொண்டு அம்பேத்கரை பற்றி நாடாளுமன்றத்தில் தவறாக பேசிய அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் புகழ் நாடு முழுவதும் ஓங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.