ராமநாதபுரம் காவல் அதிகாரிக்கு கொலைமிரட்டல் விட்ட வாலிபர் மீது வழக்கு பதிவு

போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற காரை வீல் லாக் செய்த போக்குவரத்து ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் சிறையில் அடைப்பு

Update: 2024-12-21 02:36 GMT
ராமநாதபுரம் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற காரை வீல் லாக் செய்த போக்குவரத்து ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரத்தில் போக்குவரத்துப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிபவர் செந்தில்சுரேஷ் (42), இவர் ராமநாதபுரம் சாலை தெருவில் இந்தியன் வங்கி அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற காரை வீல் லாக் செய்து விட்டார். பின் அரண்மனை பகுதியில் வாகனசோதனை நடத்திக்கொண்டிருந்தார். ஆர்.காவனுார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது கார் வீல் லாக் செய்யப்பட்டிருப்பதை அறிந்து போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்து, கீழே தள்ளிவிட்டார். செந்தில்சுரேஷ் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

Similar News