மவுலிவாக்கம் சாலையில் வடிகால் பணி அரைகுறை
மவுலிவாக்கம் சாலையில் வடிகால் பணி முடிவடைவதால் பொதுமக்கள் கடும் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே மாங்காடு - -மவுலிவாக்கம் நெடுஞ்சாலையில், வெள்ள நீரை வெளியேற்ற, 4 கி.மீ., துாரத்திற்கு, 12 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது. போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேறும் கால்வாயுடன் இணைக்கும் வகையில், இந்த கால்வாய் கட்டுமான பணிகள் துவங்கின. வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. கால்வாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாமல், துண்டு துண்டாக கட்டப்பட்டுள்ளன. இதனால், மழைநீர் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வழியில்லாததால், சாலையிலேயே தேங்கி நிற்கிறது. எனவே, கால்வாய் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.