திருமங்கலம் அருகே ஒலிப்பெருக்கி போட்டி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இன்று ஒலிப்பெருக்கி போட்டி மற்றும் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-12-21 11:30 GMT
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் காங்கேயநத்தத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிச.21) நடைபெற்ற அன்னதானம் வழங்குதல் மற்றும் ஒலிபெருக்கி இசை நிகழ்ச்சி போட்டியை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட திமுக நிர்வாகிகள், திருமங்கலம் மேற்கு ஒன்றிய - கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News