கோவை: நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் நிகழ்ச்சி !

நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஐயா திரு. M.ரவி ஐபிஎஸ் அவர்கள், வருமானவரித் துறை கமிஷனர் திரு. வி.நந்தகுமார் ஐஆர்எஸ் அவர்கள், சிவில் சர்வீஸஸ் பயிற்சியாளர் திரு. ஸ்ரீவத்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-12-21 12:12 GMT
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள,SNR அரங்கில் நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கலந்து கொண்டார், அதில் பேசியவர் சிவில் சர்வீஸஸ் அதிகாரிகள், நமது இந்திய ஜனநாயகத்தின் காவலர்கள். பாகுபாடின்றி செயல்படுபவர்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய மாநில அரசுகளின் திட்டங்களைச் செயல்படுத்தும் முழுமையான அதிகாரம் பெற்றிருப்பவர்கள். இந்தத் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியருக்கு, அடுத்த 30 ஆண்டுகள் நாட்டை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதுதான் முக்கியப் பணியாக இருக்கும். எனவே அதற்காகத் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Similar News