குமரி : குளக்கரையில் மூட்டைகளில் கேரள மருத்துவ கழிவுகள்

இரவில் கலெக்டர் ஆய்வு

Update: 2024-12-21 12:15 GMT
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கொண்டு சென்று கொட்டி விட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் திருநெல்வேலி பவர் மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள்  வீசிவிட்டு சென்றது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.       இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நாகர்கோவில் அடுத்த பறக்கை  குளத்தின் கரையில் மர்ம நபர்கள் கேரள கழிவுகளை கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்த சாலையில் ஒருபுறம் வயல்களும், மறுபுறம் குளமும் உள்ளது.        இது தொடர்பாக ரவீந்திரன் என்ற விவசாயி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து நேற்று இரவு 10:30 மணி அளவில் கலெக்டர் அழகுமீனா திடீரென அந்த பகுதியை சென்று ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத் துறை அதிகாரிகளும் சென்று இருந்தனர். முதலில் இது சாதாரண பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள் என்ன நினைத்தனர். ஆனால் அதை ஆய்வு செய்தபோது இரு சாக்கு பைகளில் மருத்துவக் கழிவுகள் இருந்தது தெரிய வந்தது.        பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து பாட்டில்கள், சிரிஞ்சு வகைகள், ரத்தம் வடிந்த பஞ்சுகள் என மருத்துவ கழிவுகள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை கண்டுபிடிக்க காவல்துறைக்கு  கலெக்டர் உத்தரவிட்டார்.

Similar News