விஜயேந்திரர் சுவாமிகள் காஞ்சிபுரத்திற்கு வருகை

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி வந்தார். அங்கு, மடத்தின் ஸ்ரீகாரியம் விஸ்வநாத சாஸ்திரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டன

Update: 2024-12-22 05:42 GMT
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சங்கர மடத்தில், கடந்த 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி தலைமையில், 44வது கிருஷ்ண விஜய துர்கா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுரவுதசுமார்த் வித்வத் மஹா சபையின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்த காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரத்திற்கு வந்தார். அவருக்கு, காஞ்சிபுரம் சர்வதீர்த்தக்குளக்கரை அருகே, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் தலைமையில், கோவில் ஸ்தானீகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதையடுத்து, காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி வந்தார். அங்கு, மடத்தின் ஸ்ரீகாரியம் விஸ்வநாத சாஸ்திரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டன. பர்வதமலை சிவன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், சங்கரா கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் மடத்தின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Similar News