ஆக்கிரமிப்பு அகற்றம்

வருவாய்த் துறையினருக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு கடைகள் இடித்து அகற்றம்

Update: 2024-12-22 08:11 GMT
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெருந்துறை செல்லும் சாலையில் அமைந்து உள்ள கீழ் திண்டல் பகுதியில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை அளவீடு செய்த போது அரசுக்கு சொந்தமான 20 சென்ட் இடத்தை அதைப் பகுதியைச் சேர்ந்த 4 பேர் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவர்களிடம் எடுத்து கூறியும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து வந்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இடத்தை மீட்டு வருவாய்த்துறை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற 7 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய மறுத்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வருவாய் துறையினர் முடிவு செய்தனர். காலை 5.30 மணி அளவில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளை அகற்றினர். இதற்காக பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கடைகள் வீடுகளை இடித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அந்த இடம் மீட்கப்பட்டு இந்து அறநிலையத்துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.

Similar News