மிரட்டி பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்களிடம் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்த 2 இளைஞர்கள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த தீபக்(41) என்பவர் தனது நண்பருடன் இருசக்கரவாகனத்தில் வத்தலகுண்டு பைபாஸ் பெரியபள்ளப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த சேக்பரீத்(29), ஜஸ்டின்செல்வராஜ்(22) ஆகிய 2 பேர் கைகாட்டி விலாசம் கேட்பது போல் நிறுத்தி திடீரென கத்தியை எடுத்து தீபக் மற்றும் அவரது நண்பர் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி தீபக் சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் அப்பகுதிக்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஜஸ்டின்செல்வராஜ்(22), ஷேக்பரீத்(29) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.