கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது

அம்பாத்துரை அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

Update: 2024-12-22 12:56 GMT
திண்டுக்கல்லை சேர்ந்த மணி(40) என்பவர் இருசக்கரவாகனத்தில் ராஜு மில்க் அருகே வந்து கொண்டிருந்தபோது விலாசம் கேட்பது போல் இருசக்கர வாகனத்தை திண்டுக்கல் மேட்டுப்பட்டி, நடூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார்(22), பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முகமதுசித்தீக்(26) ஆகிய இருவரும் நிறுத்தி மணியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி செல்போனை பறித்து சென்றது தொடர்பாக அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வசந்த், சார்பு ஆய்வாளர் பரமசாமி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News