மதுவிலக்கு வாகனங்கள் ஏலம்
திண்டுக்கல்லில் மதுவிலக்கு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 24 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை வருகின்ற 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் முன் பணத்தொகையாக ரூ.1000 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளவும் அனுமதி சீட்டு திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வருகிற 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 26-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏலத்தில் வாகனத்தை பெறும் நபர்கள் ஏலத்தொகையுடன் 18% GST செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.