விழுப்புரம் காவல் சரகம் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் IPS தலைமையில் விழுப்புரம் காவல் சரகம் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மெச்சதகுந்த பணிகளை செய்த அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் திருமதி. ஜெர்மின்லதா, நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், திட்டக்குடி காவல் உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் உதவி ஆய்வாளர் அழகிரி, விருத்தாச்சலம் காவல் உதவி ஆய்வாளர் சந்துரு, திருப்பாதிரிப்புலியூர் காவல் உதவி ஆய்வாளர் கதிரவன், அண்ணாமலை நகர் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன், விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர்கள் திருமதி. சரண்யா மற்றும் வினோத்குமார், மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், டெல்டா பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, சைபர் கிரைம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. பாலமுருகன், திருப்பாதிரிபுலியூர் தனிப்பிரிவு முதல்நிலை காவலர் இராமச்சந்திரன் ஆகியோர்களின் மெச்ச தகுந்த பணிகளை பாராட்டி காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் IPS, விழுப்புரம் சரக துணை தலைவர் திருமதி. திஷா மிட்டல் IPS, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிபாளர் ரஜத் சதுர்வேதி ஆகியோர் உடன் இருந்தனர்.