அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்
அமராவதி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்
தாராபுரம் முகாம் அலுவலகத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், மாம்பாடி ஊராட்சியில் இருந்து குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சங்கரண்டாம் பாளையம் ஊராட்சி, புங்கந்துறை கிராமம் வரை நபார்டு திட்டம் மூலம் ரூ 14 கோடி மதிப்பில் அமராவதி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஏற்பாட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர். இதில் தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.