திருச்செங்கோட்டில் அறுபத்து மூவர் பெருவிழா

திருச்செங்கோட்டில் அறுபத்து மூவர் பெருவிழா

Update: 2024-12-23 01:36 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கு கடந்த 7ம் நூற்றாண்டு திருஞானசம்பந்தர் வருகை தந்தார் அப்போது இந்தப் பகுதியில் நிலவிய குளிர் சுரம் என்னும் நோய் நீங்க பாசுரம் பாடினார். .இதனை நினைவு கூறும் வகையில் அருள்நெறி திருப்பணி மன்றத்தின் சார்பில் கடந்த 3 வருடங்களாக அறுபத்து மூவர் பெருவிழா விமர்சையாக கொண்டாடப் படுகிறது இன்று 4வது ஆண்டு அறுபத்து மூவர் பெருவிழா விமர்சையாக கொண்டாடப் பட்டது நிலத்தம்பிரான் கோவில் என அழைக்கப் படும் கைலாசநாதர் கோவிலில் இருந்து விநாயகர், அம்மையப்பர், சுகந்த குந்தலாம்பிகை எனும் தளிஅம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் ஒன்பது தொகையடியார்கள் சந்தன குரவர்கள் நால்வர் உள்ளிட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களும் திருவீதி உலா வந்தனர் மலர்களால் அலங்கரிக்கப் பட்ட இருபது பல்லக்குகளில் அறுபத்து மூவரை வைத்து சிவ வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் எடுத்து வந்தனர் நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் . நான்கு ரத வீதிகளை வலம் வந்த அறுபத்து மூவர் உலா கைலாச நாதர் கோவிலில் நிறைவடைந்தது . வழியெங்கும் திரளான பக்தர்கள் அறுபத்து மூவர் பெருவிழாவை கண்டு ரசித்தனர் முன்னதாக. பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது

Similar News