கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம்;

Update: 2024-12-23 11:14 GMT
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள கே.ஆர் திருமண மஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் தலைமை வகித்தார். கொமதேக பொது செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி புதியவர்களை கட்சியில் இணைத்தல் நமது செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளை கட்சியினர் முனைப்புடன் செய்ய வேண்டும்..எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் செயல் படுகிறோம். கொமதேக என் நெஞ்சை நிமிர்த்தி மக்களை சந்திக்க செல்லும் தகுதியோடு இருக்கிறோம் விரைந்து செயல்படுங்கள் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையம் வெற்றிபெற அதிதீவிரமாக உழைக்க வேண்டம் என பேசினார். நிகழ்சசியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கொமதேகவில் தங்களை இணைத்து கொண்டனர். செயற்குழ கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கொமதேக பொது செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது மகளிர்உரிமைத் தொகை வரும் தேர்தலுக்குப் பின் உயர்த்தப் பட வாய்ப்பு உள்ளது. சேலம் மாவட்டத்தை 3 ஆக பிரித்து திருச்செங்கோடு மற்றும் ஆத்தூரை தலைமை இடங்களாக கொண்டு 2 புதிய மாவட்டஙகள் அமைக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் கட்சி தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது .புதிதாக கட்சிகள் முளைப்பதை வரவேற்கிறோம். ஆனால் கட்சி தொடங்கிய உடனே ஆட்சியமைப்போம் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை வைப்பதை பெரிதுபடுத்தி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயல்கின்றன. மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என நாங்களும் அரசிற்கு கோரிக்கை எழுப்பி கொண்டு தான்இருக்கிறோம் ஒன்றுமில்லாத விஷயங்களை உசுப்பி உசுப்பி திமுக கூட்டணியில் பிளவு வராதா என சமூக ஊடகங்கள் முயற்சிக்கின்றன. சமுக ஊங்கங்கள் தான் அண்ணாமலை, ஆரவ் அர்ஜீனனா போன்றவர்களை வளர்த்து விடுகின்றனர். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை கொங்கு மண்டலத்தில் இருக்கிற தொழில்கள், அதை சார்ந்து கோரிக்கைகள், அதையெல்லாம் முதலமைச்சரிடத்தில் பேசி அதனை நிறைவேற்றக்கூடிய அந்த அதிகாரம் எனக்கு இருக்கிறது என்று சொன்னால் அதைத்தான் ஆட்சியிலே பங்கு அதிகாரத்தில் பங்கு என்று நான் நினைக்கின்றேன். கொங்கு மண்டலத்தின் வளர்சிக்கு நாங்கள் பெறுகிற திட்டங்கள் தான் அதை நிருபித்து கொண்டிருக்கின்றன. குடியரசு தினவிழால் மாநில வாகனங்கள் பங்கு பெறுவதை மத்திய அரசு தான் தீர்மானிக்க முடியும். வரும் குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் வாகனம் இடம பெற எடப்பாடி பழனிசாமி மத்திய அரசைகேள்வி கேட்கிறாரா மாநில அரசை கேள்வி கேட்கிறாரா என்பதை தெளிவு படுத்த வேண்டும். ,இது குறித்து முதல்வர் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.அதனைத்தொடர்ந்து தான் மறுப்பு வந்த கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருமணிமுத்தாறு திட்டம் இந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப் படும் என்ற நம்பிக்கை உள்ளது.2025ம் ஆண்டுக்குள் திருச்செங்கோடு ரிங்ரோடு திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும், திருச்செங்கோடு புதியபுறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பதிலாக இருக்கும் பேருந்து நிலையங்களை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை அரசி்ற்கு அனுப்ப பட்டுள்ளது. திருச்செங்கோடு மலைக்கு மாற்றுப்பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை அரசிடம் கொடுக்கப் பட்டுள்ளது. எனக்கூறினார். நிகழ்ச்சியில் நாகமகல் மேற்க மாவட்ட கொமதேக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்க பின் கடந்த 6மாதங்களுக்கு முன் தேவனாங்குறிச்சி பள்ளம் பகதியில்தீ விபத்தில் தமிழரசு, வனிதா ஆகியோரது வீடு சேதமடைந்தது. இதில் அனிமேஷன் படித்து வரும் அவரகளது சகன் தீபேஷ் என்பவரது லேப்டாப் எரிந்து போனது இதனை அறிந்து எம்எல்ஏ ஈஸ்வரன் தீபேஷ்லேப்டாப் வாங்க ரூ10ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Similar News