குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வினா விடை புத்தகம்
செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் வழங்கிய குளித்தலை எம்எல்ஏ;
கரூர் மாவட்டம் குளித்தலை அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திம்மாச்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கோட்டைமேடு அரசு மேல்நிலைப்பள்ளி, நெய்தலூர் காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, திம்மம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, இனுங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பணிக்கம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு 960 மாணவ மாணவியர்களுக்கு வினா விடை புத்தகங்களை வழங்கினார். இதில் திமுக மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்