அரசு கலைக்கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிடி தமிழ் தொலை காட்சிக்காக பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு விருது பெற்று வந்த பேராசிரியரை கல்லூரி முதல்வர் பாராட்டி கௌரவித்தார்;
அரியலூர் டிச.23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் ராயதுரை டிடி தமிழ் தொலைக்காட்சிக்காக பட்டிமன்றம் படபிடிப்பு-2024 நிகழ்ச்சியில் புதுவை சுத்தாத்துவித சைவத்திருமடம் மற்றும் நெய்வேலி தாய்த்தொண்டு மையம் சார்பில் காமராசர் விருது வழங்கப்படுள்ளது. விருது பெற்று வந்த தமிழ் துறை விரிவுரையாளர் ராய துரையை கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ் பாராட்டி கௌரவித்தார். உடன் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இராசமூர்த்தி, கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குநர் முனைவர் அன்பரசன் மற்றும் அரியலூர் அரசு கலைக்கல்லூரி பொருளாதாரத்துறை உதவிப்பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.