ஆலிச்சிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார்
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆலிச்சிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வுக்கான உபகரணங்கள் மற்றும் பீரோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதிமுக விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் தம்பிதுரை தலைமை தாங்கினார். மாநில பேரவை துணை செயலாளர் அருளழகன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் வக்கீல் அருண், குப்பநத்தம் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம் எல் ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி தேர்வு எழுத தேவைப்படும் பேனா, பென்சில், நோட்டு, ஸ்கேல் மற்றும் பரீட்சை அட்டைகள், பள்ளிக்கு தேவையான 2 பீரோக்கள் என சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் அரங்க.மணிவண்ணன், சத்யா செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆலிச்சிக்குடி கிளைச் செயலாளர் சிவா நன்றி கூறினார். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.