மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் முந்திரி தொழில் நுட்ப பயிற்சி

விவசாயிகள் பங்கேற்பு

Update: 2024-12-23 17:57 GMT
விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பட்டியிலின வகுப்பிற்கான "முந்திரியில் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள்" பற்றிய தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது. மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாஸ்கரன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் முனைவர் சுப்ரமணியன் கலந்துகொண்டு முந்திரியின் முக்கியத்துவம், மண்டல ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப்பட்ட முந்திரி இரகங்கள், முந்திரி ஆராய்ச்சிகள் ஆகிய விளக்கங்ளுடன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து விவசாயிகள் அனைவருக்கும் வி.ஆர்.ஐ.3 முந்திரி ஒட்டுக்கன்றுகள் வழங்கப்பட்டது. நல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலெக்ஸ், தோட்டக்கலை இணை பேராசிரியர் பாஸ்கரன் கலந்துகொண்டு விளைச்சல் தரும் முந்திரி ரகங்களை பற்றியும். இணை பேராசிரியர் நீலாவதி முந்திரியில் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் பற்றியும், உதவி பேராசிரியர் பூச்சிகள் ராஜ பாஸ்கர் முந்திரியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றியும் உரையாற்றினர். இறுதியாக இணை பேராசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார். இப்பயிற்சியில் முதனையைச் சேர்ந்த 49 கிராம விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

Similar News