விருத்தாசலத்தில் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்த பயிற்சி
விவசாயிகள் பங்கேற்பு
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்த பயிற்சி நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் பயிற்சியை துவக்கி வைத்து வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு குறித்து பேசினார். வேளாண் விஞ்ஞானி பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் வீரசுப்பிரமணியன், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், அஜிதா உள்ளிட்ட பொறியியல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு திட்டங்களையும், இயந்திரங்கள் பற்றியும் பயிற்சி அளித்தனர். வி.எஸ்.டி இயந்திர விற்பனையாளர் புனிதா அந்தோணி, ஜான் டீர் கம்பெனி, ஆர்.கே ஆட்டோமொபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டு டிராக்டர், பவர் டில்லர், கரை அணைக்கும் கருவி, களை எடுக்கும் கருவி, சிறிதாக ஏற்படும் பழுதுகள் நிவர்த்தி மற்றும் பராமரிப்பு, சூரிய மின்வேலி மற்றும் சூரிய உலர்த்தி குறித்து பயிற்சி அளித்தனர். தேசிய உர நிறுவனத்தில் அலுவலர்கள் கலந்து கொண்டு நீரில் கரையும் உரங்கள், ரசாயன உரங்கள், கனிம உரங்கள் பற்றி பயிற்சி அளித்தனர். வேளாண் விஞ்ஞானிகள் பாரதி குமார், காயத்ரி, கண்ணன், சுகுமாரன், ஜெயக்குமார், கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு தொழில்நுட்ப உரையாற்றினார்கள். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.