கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Update: 2024-12-23 18:01 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார். அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 621 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.3,200 மதிப்பீட்டில் காதொலி கருவியும் மற்றும் இன்றைய தினம் மனுஅளித்த ஒரு மாற்றுத்திறனாளி பயனாளியின் மனுவை பரிசீலனை செய்து உடனடியாக ரூ.9,300 மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.. வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News