தாராபுரத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
தாராபுரத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த காவல்துறையினர்;
தாராபுரத்தைச் சேர்ந்தவர் யமுனா இவர் ஐந்து சாலை சந்திப்பு அரசு பள்ளி அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த வாலிபர் இவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையிடம் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த லிங்கேஸ்வரன் (வயது 20) என்பதும் யமுனாவிடம் செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர்