அரியலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியாரின் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.;

Update: 2024-12-24 10:11 GMT
அரியலூர், டிச.25- அரியலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தந்தை பெரியார் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் திருச்சி சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார், ஆசிரியர் செல்வராஜ், மாவட்ட அமைப்பாளர் சின்னராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

Similar News