அரியலூரில் எம்.ஜி.ஆர் நினைவுத் தினம் அனுசரிப்பு

அரியலூரில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு திருஉருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2024-12-24 11:36 GMT
அரியலூர், டிச.24- முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.அரியலூர் மங்காய் பிள்ளையார் கோயில் மற்றும் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் மற்றும்  பெரியார் சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், முன்னாள் மாவட்டச் செயலர் இளவழகன், முன்னாள் மாநிலங்களை உறுப்பினர் இளவரசன், அம்மாப்பேரவை மாவட்டச் செயலர் சங்கர், மாவட்ட இணைச் செயலர் பிரேம்குமார், நகரச் செயலர் செந்தில், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் கல்லங்குறிச்சி பாஸ்கர், ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி, கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் வடக்கு செல்வராஜ், தெற்கு பாலசுப்பிரமணியன், முன்னாள் அரசு வழக்குரைஞர் எஸ்.சாந்தி, வழக்குரைஞர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.இதே போல் ஜெயங்கொண்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அந்தந்தப் பகுதி அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Similar News