அரியலூரில் பாமக-வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பாமகவினர் 10.5 சதவீத தனி உள் இட ஒதுக்கீடு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-12-24 11:38 GMT
அரியலூர்,டிச.24- வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஓதுக்கீடு வழங்கக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் தமிழ்மறவன் தலைமை வகித்தார். மாநில மாணவர் சங்க செயலர் ஆளவந்தார்,  முன்னாள் மாவட்டச் செயலர் காடுவெட்டி ரவி, அமைப்புச் செயலர் திருமாவளவன் மாநில முன்னாள் துணைத் தலைவர் சின்னதுரை,அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Similar News