மருத்துவமனை வளாகத்திலிருந்து பாம்பு மீட்பு.
மதுரை அருகே தனியார் மருத்துவமனையிலிருந்த நல்ல பாம்பு மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் விளாச்சேரி அருகே முனியாண்டிபுரத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் இன்று (டிச.24) நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை அறிந்த மருத்துவமனை அலுவலர்கள் பாம்பு பிடி வீரரான ஸ்நேக் பாபு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தார்.