மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
புரட்சி பாரதம் கட்சி சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி எதிரில் இந்திய அரசியல் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய கோரியும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினர் பூவை டாக்டர் எம் ஜெகன் மூர்த்தியார் ஆணைக்கேற்ப தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மாநகர் மாவட்ட பொருளாளர் ஜரினா பானு மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் இந்திரன் அந்தோணிசாமி மாவட்ட தொழில் சங்க செயலாளர் துறைமுகம் சிவனைந்த பெருமாள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் அசோக் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டு அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.