முன்னாள் முதல்வருக்கு அதிமுக கட்சி அலுவலகத்தில் அஞ்சலி
அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 37ம் ஆண்டு நினைவு நாள் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 37ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையடுத்து தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் நேற்று, கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.பின்னர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் அவைத்தலைவர் தொமு.நாகராஜன், மாநில விவசாய அணி பிரிவு செயலாளர் டி.ஆர்.அன்பழகன், அம்மா பேரவை செயலாளர்எஸ்.ஆர்.வெற்றிவேவல்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,நகர செயலாளர் பூக்கடை ரவி நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம் .பழனி. தர்மபுரி நகர மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி .அலமேலு சக்திவேல். ராஜாஜி. சத்யா கார்த்திக் . தனலட்சுமி நாகராஜன். செந்தில் வேலன். நாகேந்திரன் . தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மண்டல இணைச் செயலாளர் பிரசாத். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சரவணன்.உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் சார்பு அமைப்பு நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.