தவெக சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரி நகராட்சி உட்பட்ட ஔவையார் பள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது பெரியார் சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெரியார் நினைவு தினம் மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-12-25 00:37 GMT
தர்மபுரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தந்தை பெரியார் 51-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் அவர்களின் கொள்கையை பின்பற்றும் விதத்தில்,தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் கே விஜயகாந்த், மாவட்ட நிர்வாகிகள் , மாவட்ட மகளிர் அணி , மாவட்ட அணித் தலைவர்கள் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது.

Similar News